Tuesday 2nd of June 2026

English Tamil
Advertiesment


75உடன் தோல்வியடைந்த ஐதேக


2021-09-06 14890

இரண்டாம் சுற்று ஆரம்பிப்பதா, இல்லையா என தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும்

 

ஐதேகவின் கொள்கை “திறமையுடையோருக்கு சந்தர்ப்பம்”

 

இந்த கொள்கையை மீறிய எல்லா சந்தர்ப்பத்திலும் கட்சியே தோற்றது

 

பாதுகாத்த சந்தர்ப்பத்தில் வெற்றிபெற்றது

 

 

“இப்போது நாம் அனைவரும் இணைந்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி என அடையாளப்படுத்துவோம்” என்று தந்தை டி.டிஸ் சேனாநாயக்க தெரிவித்திருந்தார். “நான் இன்று அறிவிக்கின்றேன் நீங்கள் அனைவரும்... ஐக்கிய தேசியக் கட்சி சமூகமயவாத கட்சி. எமக்கு அப்படித் தெரிவித்தவர் ஜே.ஆர். ஜயவர்தன அவர்கள்.

காமினி திஸாநாயக்க ஐக்கிய தேசியக்க ட்சியை விட்டு பிரிவதற்கு இருந்தபோது பத்திரிகையொன்றில் இப்படியான செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. நீங்கள் அமைச்சரவையிலிந்து நீக்கப்பட்ட போதும், தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களிலிருந்து விலக்கப்பட்டுள்ள நிலையிலும் தொடர்ந்தும் ஏன் ஐக்கிய தேசியக் கட்சி பற்றி பேசுகின்றீர்கள்?

அதற்கு பதிலளித்த காமினி திஸாநாயக்க - ஐக்கிய தேசியக்கட்சி மீதான எனது கருத்து, தொடர்ந்தும் மற்றவர்களின் செயற்பாடுகள் காரணமாக மாற்றமடையாது. அது ஒருபோதும் எனக்கு ஏற்படுகின்றவற்றின் மீதும் தங்கியிருக்காது. அவை அனைத்துமே எனது உள்ளார்ந்த இணைப்பு மற்றும் நான் பிரதிநிதத்துவம் செய்கின்ற மக்களின் அபிலாஷைகள், விருப்பங்களிலேயே தங்கியிருக்கின்றது.

எனது அரசியல் இல்லம் தற்போதும் 75ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் அனைத்துமே எனக்கு நினைவுக்கு வருகிறது. ஐக்கிய தேசியக் கட்சி தாராளவாதக் கொள்கை என்பது, ”சம திறமைகளைக் கொண்டிருப்பவர்களுக்கு சந்தர்ப்பம் அளித்தல்” என்பதாகும். அந்தக் கொள்கையை பின்பற்றும்வரை ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெறுகிறது, அந்தக் கொள்கை மீறப்பட்டால் கட்சி படுதோல்வியடையும். 

ஐக்கிய தேசியக் கட்சி அன்று தமது 70ஆவது நிறைவாண்டைக் கொண்டாடியபோது எனது நண்பன் சாமர லக்ஷான் குமார இப்படிக் கூறினார். ” ஐக்கிய தேசியக்கட்சி விக்கெட் இழப்பின்றி 70”. இன்று எனக்கு ஒருவிடயம் நினைவுக்கு வருகிறது. ” ஐக்கிய தேசியக்கட்சி 75ஆவது நிறைவாண்டைக் கொண்டாடுகின்ற போது விக்கெட் இழப்பின்றி 70 ஓட்டங்களுடன் களத்தில்”.

இன்று ”ஐதேக 75ஆவது நிறைவாண்டிலுள்ள நிலையில், எப்படியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். எனக்கு அரசியல் சொல்லிக்கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!

 

- ஹரின் பெர்ணான்டோ-
 
ஐக்கிய மக்கள் சக்தி
 
நாடாளுமன்ற உறுப்பினர்
Advertiesment